என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போடிகாமன்வாடியில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
  X

  போடிகாமன்வாடியில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் விசாகன் மரக்கன்றுகளை நட்டார்.

  போடிகாமன்வாடியில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போடிகாமன்வாடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
  • கிராம பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும் என கலெக்டர் விசாகனிடம் கோரி கோரிக்கை வைத்தனர்.

  செம்பட்டி:

  ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீவல்சரகு, போடிகாமன்வாடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கலெக்டர் விசாகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

  இதுகுறித்து, கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது,

  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 306 கிராம ஊராட்சிகளிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  சுகாதார மற்றும் நீர் மேலாண்மையை வலியுறுத்தும் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 20-ந்தேதி தொடங்கப்பட்டது. 2.10.2022 வரை நடைபெறும் பிரச்சாரத்தின் முதல் நிகழ்வாக, அனைத்து அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மிகச் சிறப்பாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வள மையம், கிராம நிர்வாக அலுவலகம், கிராமப்புற நூலகம், பொது விநியோக கடை உள்ளிட்ட 2,536 அரசு அலுவலக கட்டிடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

  306 கிராமம் ஊராட்சிகளில் உள்ள 3,084 குக்கிராமங்களில் 2530 இடங்கள் அதிகமாக குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளை 2,588 தூய்மை காவலர்கள், நேரு யுவகேந்திரா தொண்டர்கள், மகளிர் குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

  கழிவுநீர் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுள்ளது. மேலும் 228 வரத்து வாய்க்கால் பகுதிகள், 536 நீர் நிலைப் பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

  நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், துாய்மைப் பணிகள் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர்தேக்க தொட்டி, இதர நீர் ஆதாரங்கள் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யும் பணிகள் அனைத்து கழிவுநீர் வாய்க்கால், கழிவுநீர் வாய்க்கால் நிறைவுறும் பகுதி துாய்மைப்படுத்தும் பணிகள், இதர அரசு அலுவலக கட்டிடங்கள் தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

  1.10.2022 வரை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், உதவி இயக்குநர் (ஊராட்சி) ரெங்கராஜன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், கிராம ஊராட்சித் தலைவர்கள் போடிகாமன்வாடி நாகலட்சுமி சசிக்குமார், சீவல்சரகு ராணி ராஜேந்திரன், ஊராட்சி செயலர்கள் திருப்பதி, சேசுராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  போடிகாமன்வாடியில் கிராம பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும் என கலெக்டர் விசாகனிடம் கோரி கோரிக்கை வைத்தனர். அதனை உடனடியாக நிறைவேற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

  Next Story
  ×