என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெண்ணை விரட்டி விரட்டி வெட்டிய கள்ளக்காதலன்
  X

  பெண்ணை விரட்டி விரட்டி வெட்டிய கள்ளக்காதலன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவர்களுக்குள் சிறு வாக்குவாதம் முற்றவே வாகனத்தில் ஏற மறுத்துள்ளார்.
  • தொப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தொப்பூர்,

  தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்களாபுரத்தில் இயங்கி வரும் தனியார் கார்மெண்ட்ஸ்சில் இண்டுர் அருகே உள்ள கீழ் குள்ளனூர் பகுதியை சேர்ந்த மணிமேகலை (வயது 35) என்பவர் வேலை செய்து வருகிறார்.

  அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 42) என்பவர் விவசாய பணியை செய்து வரும் நபரும் 8 வருடங்களாக பழகி வந்துள்ளனர். பழக்கம் அதிகமாகி நெருங்கி பழகியிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முருகனின் மனைவிக்கு கள்ளகாதல் விவகாரம் தெரியவர மன விரக்தியில் தீ குளித்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று மணிமேகலை வழக்கம் போல் மாலை பணி முடிந்தவுடன் நிறுவனத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு முருகன் சாலையில் காத்திருந்துள்ளார்.

  மணிமேகலையை கண்டதும் முருகன் தன்னுடைய பைக்கில் உட்காருமாறு கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் சிறு வாக்குவாதம் முற்றவே வாகனத்தில் ஏற மறுத்துள்ளார்.

  இதில் ஆத்திரமடைந்த முருகன் தன்னுடைய பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொண்டு தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்களாபுரம் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் விரட்டி விரட்டி வெட்டியுள்ளார். கழுத்தை குறிவைத்து வெட்ட முயற்சித்த போது கைகளை கொண்டு தடுக்க முயற்சித்த சமயத்தில் மணிமேகலையின் இரண்டு கைகளிலும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

  உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மணிமேகலையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற முருகனை சுற்றி வளைத்து பிடித்துள்ளர். அதனை தொடர்ந்து தொப்பூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அப்போது கடந்த எட்டு வருடங்களாக தான் கட்டிய மனைவியை கூட இவளுக்காக இழந்து விட்டு வாழ்ந்து வந்ந நிலையில் தற்போது என்னை ஏமாற்ற முயற்சித்தால் அதனால் தான் அந்த ஆத்திரத்தில் வெட்டினேன் என்று தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் முருகன் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

  Next Story
  ×