என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிட மேஸ்திரி தூக்குபோட்டு தற்கொலை
- மேஸ்திரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
- தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தொட்டப்பன். இவரது மகன் சரவணன் (வயது24). கட்டிட மேஸ்திரியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த சரவணன் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






