என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒசூரில் மர்ம நபர்கள் துணிகர கைவரிசை:  சிலம்பாட்ட பயிற்சியாளர் வீட்டில் 10 பவுன் நகை - பணம் கொள்ளை
    X

    ஒசூரில் மர்ம நபர்கள் துணிகர கைவரிசை: சிலம்பாட்ட பயிற்சியாளர் வீட்டில் 10 பவுன் நகை - பணம் கொள்ளை

    • 60,000 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஒசூர்,

    ஒசூர் கோகுல்நகர், நந்தவனம் லே- அவுட் அருகே வசித்து வருபவர் சிலம்பாட்ட பயிற்சியாளர் நாகராஜ்(வயது 58).

    இவர் நேற்று மாலை பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் கற்பிக்க வெளியே சென்றுள்ளார். இவரது வீட்டில் யாருமில்லாத சமயத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைந்து பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 60,000 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    பயிற்சிக்கு பிறகு வீட்டிற்கு வந்த நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து ஒசூர் நகர போலிசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×