என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி அருகே தொழில் நஷ்டத்தால் ஜவுளி வியாபாரி தற்கொலை
- தொழிலில் நஷ்டத்தால் மனஉளைச்சலில் இருந்தவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி(54). இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பெட்டிக்கடை வைத்தார். இருந்தபோதும் போதிய அளவு வருமானம் இல்லாததால் மனஉளைச்சலில் இருந்த அவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார்(42). விவசாய கூலிவேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி குணமாக பூச்சிமருந்தை குடித்தார். சிறிதுநேரத்தில் மயக்கமடைந்த அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சை்ககாக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






