என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- ரமேஷ் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- ரமேஷின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு சிவன் கரடு பகுதியை சேர்ந்வர் ரமேஷ், (வயது 36). இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (32) என்ற மனைவி உள்ளார். மது குடிக்கும் பழக்கம் உள்ள ரமேஷ் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று மதியம் மதுபோதையில் வந்த ரமேஷ், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story