என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமண ஆசை காட்டி பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது
- கடந்த 5-ம்தேதி காலை, பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை.
- திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்றதாக போலீசில் பெண்ணின் தாய் புகார் தெரிவித்திருந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை தாலுகா, கொப்பக்கரை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி.
இவர் ராயக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 5-ம்தேதி காலை, பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தார்.
பின்னர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் ராயக் கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த பாலாஜி (23) என்பவர், திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்றதாக தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஷ்வரி வழக்குபதிவு செய்து, இருவரையும் வலைதேடி தேடி வந்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே இருவரையும் கண்டுபிடித்து விசாரனை செய்ததில் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலாஜி கடத்தியது தெரியவந்தது. அவரை நீதிமண்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். அறிவுரை கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.






