search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித் தாள் தேர்ச்சி கட்டாயம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி
    X

    ஆசிரியர் தேர்வு வாரியம்

    விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித் தாள் தேர்ச்சி கட்டாயம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி

    • இந்த பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழியே நடத்தப்பட உள்ளது.
    • அது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு தேர்வு கணினி வழியாக நடத்தப்பட உள்ளது. அது தொடர்பான விரிவான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் மொழி தகுதி தாள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 50 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வில் 20 (40 சதவீதம்) மதிப்பெண் பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே 'பகுதி ஆ' பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவர்கள் பங்கு பெற்று பணி நியமனம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளில் தமிழ் தாள் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தியது. இந்த தகுதித் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அதற்கு அடுத்தபடியாக எழுதியிருக்கும் பொதுப்பாட பிரிவு வினாக்கள் கணக்கில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×