search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் ஊத்து கிராமத்தில் காச நோய் விழிப்புணர்வு முகாம்
    X

    முகாமில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    அய்யனார் ஊத்து கிராமத்தில் காச நோய் விழிப்புணர்வு முகாம்

    • முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.
    • ஏப்ரல் மாதம் அய்யானார்ஊத்து கிராமத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிராமத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, பொது சுகாதாரம் பற்றியும் வாழ்வில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசநோய் அறிகுறிகள், பரவும் தன்மை குறித்து எடுத்து கூறினார். மேலும் ஏப்ரல் மாதம் அய்யானார்ஊத்து கிராமத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது. ஆகவே பொதுமக்கள் காசநோய் முகாமில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

    சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து பேசினார். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன் கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி, இடைநிலை சுகாதார பணியாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×