என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டி 3-வது வார்டு பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணிகள்
- அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 3-வது வார்டுக்கு உட்பட்ட நவநகர், மூணார்க், ஸ்னோஸ்டவுன் முதல் ஜெம் பார்க் பகுதி வரை, தமிழகஅரசு நகர்ப்புற மேம்பாட்டு சாலை திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை 3-வது வார்டு அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.
ஊட்டி 3-வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துர்கா ஜெயலட்சுமிக்கு பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
Next Story






