என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்- வாலிபருக்கு போலீசார் வலை வீச்சு
    X

    திருக்கோவிலூர் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்- வாலிபருக்கு போலீசார் வலை வீச்சு

    • புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று விசாரணை செய்தார்.
    • வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

    இவர் வாய் பேச முடியாத நிலையில் சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. இவரது தந்தை வெளியூருக்கு சென்றிருந்தார். தாய் அதே ஊரில் கூலி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் தனியாக வீட்டிலிருந்த போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜா (வயது 24) அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    அப்போது இளம்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ராஜா பாலியல் தொந்தரவு செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரிடமிருந்து இளம்பெண்ணை காப்பாற்றினர்.

    இது குறித்து தட்டி கேட்டவர்களுக்கு ராஜா கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டார். எனவே இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா விரைந்து சென்று விசாரணை செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×