என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்- டாக்டர்களை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
- கடந்த 22-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது அமுதாவை பாம்பு கடித்தது.
- திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருப்பூர்:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் . இவரது மனைவி அமுதா (வயது 45). இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் குடியிருந்து விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தபோது அமுதாவை பாம்பு கடித்தது. இதனையடுத்து திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை அமுதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் அமுதா இறந்துள்ளார். அமுதாவின் சாவிற்கு டாக்டர்கள் தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.