search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே தனியார் பஸ் சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது- 14 பேர் காயம்
    X

    வாழப்பாடி அருகே தனியார் பஸ் சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது- 14 பேர் காயம்

    • பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரியில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.
    • விபத்தால் சேலம்-வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து தனியார் பஸ் இன்று காலையில் வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த இளையராஜா (வயது 33) என்பவர் ஓட்டி வந்தார்.

    வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை தாண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள தடுப்புச்சுவரியில் மோதி ஒரு பக்கமாக கவிழ்ந்தது.

    இதில் பஸ்சுக்குள் சிக்கி பயணிகள் வலியால் அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் அங்கு ஓடி வந்து கண்ணாடியை உடைத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்த டிரைவர் உள்பட 14 பேரும் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வாழப்பாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தால் சேலம்-வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×