என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
- சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
- பொதுமக்கள் தங்களது அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
வண்டலூர்:
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அணிவகுத்து நின்றன. இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து கேளம்பாக்கம் மற்றும் சென்னை நோக்கி செல்ல முடியாமல் வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன. சரியான முறையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த முடியாத காரணத்தால் 1 மணி நேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் தங்களது அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனை சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.






