என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்தண்டியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் திருடிய 3 பேர் கைது
- சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 65). ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவரது வீட்டில் கடந்த ஒரு வாரமாக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த 10-ந் தேதி ரூ.10 லட்சம் திருட்டு போனதாக கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 பேர் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து கானத்தூர் பகுதியை சேர்ந்த மார்டின் (52), சுந்தர் (62), பாபு (40) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






