search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முயன்ற வாலிபர்கள் டிராக்டர் மோதி பலி
    X

    தனியார் கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முயன்ற வாலிபர்கள் டிராக்டர் மோதி பலி

    • கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் மகன் பாலமுருகன் (வயது 23) சென்னை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

    அரியலூர் மாவட்டம் சுண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் (24) நெய்வாசலில் தனது பாட்டி வீட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பாலமுருகன், சதீஷ்குமார் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நெய்வாசல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து பாலமுருகன் வந்தார். இன்று காலை சதீஷ்குமார், பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் நெய்வாசலில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டிசென்றார்.

    ஆவணங்குடி-பட்டூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது மோட்டார் சைக்கிளின் முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முற்பட்டனர். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் எதிரே வந்த டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், பாலமுருகன் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் இறந்தார். இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×