என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு பறிமுதல்- பெண் உள்பட 2 பேர் கைது
- போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போதை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
தண்டையார்பேட்டை பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட மாவா மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வடிவேல் மற்றும் போலீசார் ஸ்ரீரங்கம்மாள் தெருவில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர்.
அங்கு போதைபாக்கு, ஆயிரம் கிலோ மாவா மற்றும் அதனை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் இருந்தது. இதையடுத்து வண்ணாரப்பேட்டையை சேரந்த புனிதா,கொடுங்கையூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






