என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
    X

    திருவள்ளூர் அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி

    • மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது37).கூலித் தொழிலாளி. நேற்று இரவு அவர் அருகே உள்ள வயலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள வேர்க்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் நுழையாமல் இருக்க மின்வேலி அமைத்து இருந்தனர்.

    இதனை கவனிக்காமல் தனசேகர் சென்றபோது மின்வேலியில் இருந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நீண்ட நேரம் தனசேகர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி நித்யா மற்றும் அவரது தங்கை அமலா ஆகியோர் வயல்வெளிக்கு சென்று தேடினர். அப்போது மின்வேலியில் சிக்கி தனசேகர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்க முயன்ற அமலா மீதும் மின்சாரம் தாக்கியது.

    தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பலியான தனசேகரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அமலாவுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விவசாய நிலத்தில் மின்வேலி வைத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×