என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் அருகே தாய்-மகன் வெட்டிக் கொலை

- தாய்-மகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- எந்தவித பிரச்சினைக்கு செல்லாத அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள துவார் ஊராட்சியில் பூமலை கண்மாய் இருக்கிறது. அடர்ந்த வனப்பதியான இங்கு கண்மாய்கரை அருகே குடிசை அமைத்து சாத்தையா என்பவரின் மனைவி அடக்கி (வயது 46), தனது மகன் சின்ன கருப்பன் (26) என்பவருடன் வசித்து வருகிறார்.
தாய்-மகன் எந்த வித அடிப்படை வசதியுமின்றி கிடைத்த வேலைகளை செய்து கொண்டு அங்கு தங்கியிருந்தனர். அவர்கள் வசித்த இடம் வனப்பகுதி என்பதால் ஆள்நடமாட்டம் இருக்காது. இந்த நிலையில் இன்று காலை துவார் பகுதியை சேர்ந்த சிலர் பூமலை கண்மாய் பகுதிக்கு சென்றனர்.
அப்போது அடக்கி, அவரது மகன் சின்ன கருப்பன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக கிடந்தனர். அவர்களை யாரோ மர்ம நபர்கள் கட்டையால் அடித்தும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே நெற்குப்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அடக்கி, சின்ன கருப்பனின் ஆகியேரின் உடல்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களும், கொடூர தாக்குதல் நடத்தியதற்கான அடையாளங்களும் இருந்தன.
இதைத்தொடர்ந்து தாய்-மகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய்-மகன் இருவரையும் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என நெற்குப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'வனப்பகுதியில் உள்ள பூமலை கண்மாய் கரையில் மின்சாரம் உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளின்றி கடந்த 20 ஆண்டுகளாக அடக்கி மற்றும் அவரது மகன் சின்னகருப்பன் வசித்து வந்தனர். எந்தவித பிரச்சினைக்கு செல்லாத அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
