search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயல்பான வேட்டை குணத்துக்கு திரும்பியது- காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்குட்டி முயலை வேட்டையாடி சாப்பிட்டது
    X

    முயலை வேட்டையாடி தின்ற புலிக்குட்டி

    இயல்பான வேட்டை குணத்துக்கு திரும்பியது- காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்குட்டி முயலை வேட்டையாடி சாப்பிட்டது

    • கடந்த ஆண்டு, புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது.
    • புலிக்குட்டியை அடைத்து வைத்து வேட்டையாடுவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

    கோவை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஆண்டு, புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது.

    அந்த புலிக்குட்டி பிறந்து 8 மாதம் இருக்கும். இதையடுத்து வனத்துறையினர் அந்த புலிக்குட்டியை மீட்டு மானாம்பள்ளி வனசரகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    அதற்காக சிறப்பு கூண்டு ஒன்று அமைத்து, அதில் புலிக்குட்டியை அடைத்து வைத்து வேட்டையாடுவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. கூண்டில் அடைக்கப்பட்டு வனத்துறையினர் வழங்கிய இறைச்சியை சாப்பிட்டு பழகியதால் இயற்கையாகவே உணவை சாப்பிடும் உணர்வின்றி காணப்பட்டது.

    எனவே புலி வேட்டையாடி பழகும் வகையில், அதற்காகவே கூண்டுக்குள் உயிருடன் முயல்கள் விடப்பட்டன. அதனை புலிக்குட்டி வேட்டையாடி சாப்பிட்டது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

    புலிக்குட்டியின் வேட்டையாடும் முறைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அடுத்த கட்டமாக வேறு விலங்குகளை கூண்டில் விட்டு வேட்டையாட பயிற்சி அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். எட்டு மாத குட்டியாக காயங்களுடன் மீட்கப்பட்டபோது 80 கிலோவாக இருந்த புலி ஒன்றரை வயதில் 144 கிலோ எடையுடன் ஆரோக்கியமாகவும், சுறு,சுறுப்பாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×