search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
    X

    தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

    • குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
    • நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை உள்ளது. இங்கிருந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்துக்கும் பூக்கள் விற்பனையாகின்றன.

    தற்போது குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் நாளை (19-ந் தேதி) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தோவாளை சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    பிச்சிப்பூ ரூ.2 ஆயிரம், மல்லிகைப்பூ ரூ.1200, முல்லைப்பூ ரூ.2 ஆயிரம், வில்வம் ரூ.200, அரளி ரூ.320, சேலம் அரளி ரூ.300, கனகாம்பரம் ரூ.1000, சம்பங்கி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150, ரோஜா ரூ.30, மரிக்கொழுந்து ரூ.200, கொழுந்து ரூ.100, கோழி கொண்டை ரூ.70, வாடாமல்லி ரூ.100, மஞ்சள் கேந்தி ரூ.80, சிவப்பு கேந்தி ரூ.80, தாமரை ஒரு பூ ரூ.35 என அனைத்து பூக்களுமே விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×