என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாலங்காட்டில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது.
- பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. இந்த மழை அதிகாலை வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.
பலத்த மழை காரணமாக திருவாலங்காடு திருவள்ளூர், சோழவரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக உருவான குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக திருவாலங்காட்டில் 10.8 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்து உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்) வருமாறு:
திருவள்ளூர் - 63
ஆர்.கே.பேட்டை - 2
திருத்தணி - 2.
பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பிரதான சாலைகள் மட்டுமின்றி பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கிநிற்கின்றது. இதனால் சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிப்புகுள்ளாகியுள்ளனர்.மேலும் சேற்றில் கால் வைக்காமல் செல்ல பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் தடுப்பு இரும்பு வேலியை பிடித்து தொங்கியவாறு செல்கின்றனர். மழை நின்று பல மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தேங்கி நிற்கும் மழை நீர் அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்க வில்லை என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குற்றஞ்சாட்டினர்.






