என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்போரூரில் வெல்டிங் கடையில் திருட்டு
- காலவாக்கத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் மன்னாரு என்பவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார்.
- மர்ம கும்பல் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வயர்கள், 2 எந்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் மன்னாரு என்பவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிச்சென்றார். இன்று கடையின் பக்கவாட்டு சீட்டு உடைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வயர்கள், 2 எந்திரம் உள்ளிட்ட பொருட்களை திருடி தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதே கடையில் இதற்கு முன்பு 3 முறை திருட்டு நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






