என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

    • பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கிராமம், எஸ்.பி.பி கார்டன் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக வெங்கல் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்பொழுது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.600- ஒரு சீட்டு கட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். அவர்கள் தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது35), பிரதீப் (வயது28), மோகன் (வயது36), நாகராஜ் (வயது33), செந்தில்குமார் (வயது38), பிரகாஷ் (வயது42) என்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட ஆறு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×