என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரெயில் மோதி பலி
    X

    செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரெயில் மோதி பலி

    • செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
    • எக்ஸ்பிரஸ்ரெயில் சுரை முர்மு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாம்பரம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுரை முர்மு (வயது24). இவர் பள்ளிகரணையில் உள்ள தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று இரவு தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில்வே நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்ரெயில் சுரை முர்மு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    Next Story
    ×