என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்
    X

    தாம்பரம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்

    • தந்தை மணி மது குடித்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவை திட்டினார்.
    • தந்தை-மகனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனியை சேர்ந்தவர் மணி(வயது55).இவரது இளைய மகன் சந்துரு(19). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவரது தந்தை கண்டித்து வந்தார். எனினும் சந்துரு தொடர்ந்து மதுகுடித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் சந்துரு மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது அண்ணன் கார்த்திக் கண்டித்தார். அவரிடம் சந்துரு தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த தந்தை மணி மது குடித்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவை திட்டினார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு திடீரென தந்தை மணியை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக மணியை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து தந்தையை அடித்து கொலை செய்ததாக சந்துரு மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×