என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் வடமாநில டெய்லர் குத்திக்கொலை
    X

    பழனியில் வடமாநில டெய்லர் குத்திக்கொலை

    • பழனி அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
    • சிலர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்கின்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருகே காந்திநகர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜெயந்த் சம்மந்தா (வயது34) என்பவர் தனியாக வீடு எடுத்து தறி மற்றும் டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவருடன் மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் அந்த வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மற்றவர்கள் ஜெயந்த் சம்மந்தா மீது கோபத்தில் இருந்தனர்.

    நேற்று இரவும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியால் ஜெயந்த் சம்மந்தாவை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனைத் தொடர்ந்து 4 வடமாநில தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் பழனி டி.எஸ்.பி. சிவசக்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜெயந்த் சம்மந்தாவின் உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

    பழனி அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்கின்றனர்.

    தற்போது கொலை செய்து விட்டு வடமாநில தொழிலாளர்கள் 4 பேரும் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு தப்பி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×