என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை தேசியக்கொடி ஏற்ற விடாமல் பிரச்சினை- கொலை மிரட்டல் விடுத்த 2 பேருக்கு வலைவீச்சு
- குடியரசு தினத்திற்காக பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடப்பட்டிருந்த 20 அடி கொடி கம்பத்தை தினேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.
- நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மூவரைவென்றான் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் கண்ணன் (வயது 51). இவரிடம் கட்டையதேவன்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், அவரது சகோதரர் செந்தில்குமார் ஆகியோர் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மூவரைவென்றான் பஞ்சாயத்தில் நேற்று முன்தினம் குடியரசு தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ்கண்ணன் நத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தினத்திற்காக பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடப்பட்டிருந்த 20 அடி கொடி கம்பத்தை தினேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.
குடியரசு தினத்தன்று வேறொரு கம்பத்தில் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டபோது அங்கு வந்த தினேஷ்குமார், செந்தில்குமார் கொடியேற்ற விடாமல் தகராறு செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.






