என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு
  X

  கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெங்கடேசன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
  • ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  ஸ்ரீபெரும்புதூர்:

  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோட்டில் மளிகை கடை வைத்திருப்பவர் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

  இந்த நிலையில் நேற்று காலையில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தான் வைத்திருந்த ரூ.1½ லட்சத்தை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

  இது குறித்து வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×