என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.
    • 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து அவர்களை சோதனை செய்ததில் அவர்கள் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகர் (வயது 22), பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆசிப்கான்(22) என்பது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×