என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகாசி அருகே 68 மின்கோபுரங்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு ஆங்கர் திருட்டு
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த அனுப்பங்குளம் மின்வாரிய நிர்வாக என்ஜினீயராக இருப்பவர் ஆருத்ரா மகேஸ்வரி.இவருக்கு சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மன்பட்டி பகுதியில் 68 மின்கோபுரங்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு ஆங்கர்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி அவர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பபதிவு செய்து மின் கோபுரங்களில் இரும்பு ஆங்கர் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுபற்றி ஆருத்ரா மகேஸ்வரி கூறும்போது, சிலர் ஆபத்தை உணராமல் மின் கோபுரங்களில் ஏறி இரும்பு ஆங்கர்களை திருடி உள்ளனர். இதனால் மின்கோபுரங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. இதில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.






