என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காஞ்சிபுரம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4-ம் வகுப்பு மாணவன் பலி
  X

  காஞ்சிபுரம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4-ம் வகுப்பு மாணவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவன் நேற்று இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினான். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
  • தூங்கிக் கொண்டு இருந்த மாணவன் நேதாஜி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான்.

  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நேதாஜி (வயது 9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

  நேற்று இரவு மாணவன் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினான். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

  இதில் தூங்கிக் கொண்டு இருந்த மாணவன் நேதாஜி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான். வீட்டில் இருந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  மாணவன் நேதாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  வீட்டின் மேற்கூரை விழுந்து மாணவன் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×