search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே தபால் ஊழியர் வீட்டில் ரூ.22 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    விழுப்புரம் அருகே தபால் ஊழியர் வீட்டில் ரூ.22 லட்சம் நகை-பணம் கொள்ளை

    • நடராஜன் தனக்குரிய பணத்தை வீட்டில் டிரங்க்பெட்டியில் பூட்டி வைத்திருந்தார்.
    • கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் டிரங்க்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    வானூர்:

    விழுப்புரம் அருகே கிளியனூர் போலீஸ் சரகம் காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). ஓய்வுபெற்ற தபால் ஊழியரான இவர் காட்ராம்பாக்கம் மெயின் ரோட்டில் எடை மேடை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

    அவரது மனைவி ராணியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நடராஜன் காட்ராம்பாக்கத்தில் தோட்டத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இவர் தனக்குரிய பணத்தை வீட்டில் டிரங்க்பெட்டியில் பூட்டி வைத்திருந்தார். நேற்று இரவு நடராஜன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் வீட்டின் தோட்டம் வழியாக வந்தனர். அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் டிரங்க்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை எழுந்த நடராஜன் டிரங்க்பெட்டி திறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த பெட்டியை பார்த்த போது, அதில் இருந்த ரூ.17 லட்சம் பணம், 13 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு திடுக்கிட்டார்.

    இதுகுறித்து கிளியனூர் போலீசில் நடராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×