என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சென்னை மாநகராட்சியில் 2 குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு ரூ.1.04 லட்சம் அபராதம்
  X

  சென்னை மாநகராட்சியில் 2 குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு ரூ.1.04 லட்சம் அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும்.
  • நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

  சென்னை:

  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

  நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

  குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 85,477 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அதன் அடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 43,835 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது.

  மேலும், 2 குப்பைத் தொட்டிகளை வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2 குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்கவும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும். நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

  இந்த தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

  Next Story
  ×