search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே கொள்ளை- நகைகளை விற்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்
    X

    கைதான கொள்ளையர்கள்.

    பொள்ளாச்சி அருகே கொள்ளை- நகைகளை விற்று அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்

    • தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராமன் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது திருட்டு வழக்கில் சிறையில் இருந்த சேர்மதுரை, பாலகிருஷ்ணன் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
    • 3 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராமனை பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை பொள்ளாச்சி மாவட்டம் அருகே சூளேஸ்வரன்பட்டியில் கடந்த 9-ந்தேதி சிக்கந்தர் என்பவர், வீட்டை பூட்டி விட்டு கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் திருவரங்கம்பட்டியை சேர்ந்த மணி என்ற பாலகிருஷ்ணன் (36), தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியை சேர்ந்த சேர்மதுரை (28) , நெல்லை பாளையம்செட்டி குளத்தை சேர்ந்த அந்தோணி என்ற அருவாபாண்டி (22), தென்காசி சாலடியூரை சேர்ந்த மணிகண்டன் (28), தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராமன் (38) என்பது தெரியவந்தது. பவானியில் பதுங்கி இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து 58 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் கைதான நபர்களில் ஸ்ரீராமன் தவிர மற்ற 4 பேர் மீதும் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

    தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராமன் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது திருட்டு வழக்கில் சிறையில் இருந்த சேர்மதுரை, பாலகிருஷ்ணன் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து 3 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராமனை பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும், ஸ்ரீராமனை தொடர்புகொண்டு தீபாவளிக்கு பொள்ளாச்சிக்கு வருவதாக தெரிவித்து உள்ளனர். இதையடுத்து பொள்ளாச்சிக்கு வந்ததும் 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும் கேரளாவுக்கு சென்று நகை, பணத்தை திருட செல்கிறோம் என்று கூறினர். அதற்கு போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஸ்ரீராம் கேரளாவுக்கு ஏன் செல்ல வேண்டும். பொள்ளாச்சிலேயே கைவரிசை காட்டலாம் என்று கூறி உள்ளார்.

    அதன்பிறகு சூளேஸ்வரன்பட்டிக்கு சென்று நகைகளை திருடிவிட்டு, 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கு அருவா பாண்டியும், மணிகண்டனும் உதவியாக இருந்துள்ளனர்.

    திருடிய நகைகளை விற்ற பணத்தில் 5 பேரும் விலை உயர்ந்த மதுபாட்டில்களை வாங்கி மது அருந்தி உள்ளனர். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை செலவழித்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×