என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ராமாபுரத்தில் வீடுபுகுந்து திருடிய 3 வாலிபர்களுக்கு தர்ம அடி
  X

  ராமாபுரத்தில் வீடுபுகுந்து திருடிய 3 வாலிபர்களுக்கு தர்ம அடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு வீட்டிற்குள் நேற்று மாலை 3 வாலிபர்கள் திடீரென புகுந்து அங்கிருந்த பொருட்களை சுருட்டினர்.
  • சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த போது கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  போரூர்

  சென்னை, ராமாபுரம், அவ்வை தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று மாலை 3 வாலிபர்கள் திடீரென புகுந்து அங்கிருந்த பொருட்களை சுருட்டினர்.சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த போது கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொள்ளையர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

  விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன், கோவூரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் வளசரவாக்கத்தை சேர்ந்த நரேஷ் என்பது தெரிந்தது. பிளம்பிங் வேலை பார்த்து வரும் 3 பேருக்கும் சரியான வேலை கிடைக்காததால் பூட்டிகிடக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் புகுந்து அங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை குறி வைத்து தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் இதே போல் வேறு எங்கெல்லம் திருட்டில் ஈடுபட்டனர். அவர்களுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×