search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை

    • சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக தலைவாசல் பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல சேலம் மாநகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சாரல் மழை பெய்தது. கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான மழையுடன் நின்று போனதால் ஏமாற்றமே மிஞ்சியது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தலைவாசலில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலத்தில் 2.7 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக எருமப்பட்டியில் 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மங்களபுரம் 8, குமாரபாளையம் 4.6, ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 29.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×