என் மலர்
உள்ளூர் செய்திகள்

புழல் அருகே 74 வயது முதியவர் விபத்தில் பலி
- புழல் அருகே 74 வயது முதியவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல் அருகே உள்ள லட்சுமி புரம் பகுதியை சேர்ந்தவர் அப்பாசாமி (வயது 74). இவர் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக செங்குன்றம்- லட்சுமிபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அப்பாசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் அப்பாசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அப்பாசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






