என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
- பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்- பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பயணிகள் போர்வையில் ரெயில்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் அந்த குழுவினர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






