என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை
    X

    நெடுஞ்சாலைத்துறை பெண் அதிகாரி வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை

    • வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை பெருமாள்புரம் கனராபேங்க் காலனியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி தேவி (வயது 58).

    தேவி நெடுஞ்சாலைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    பன்னீர்செலவம் இறந்து விட்டார். தேவி தனியாக வசித்து வந்தார். அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் தனது மகன், மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    இந்நிலையில் நேற்று வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தேவியிடம் கூறினர். அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவஇடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×