search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் மீது தண்ணீர் ஊற்றிய சம்பவம்: திருப்பூர் பஸ் நிலைய கடை ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு
    X

    பெண் மீது தண்ணீர் ஊற்றிய சம்பவம்: திருப்பூர் பஸ் நிலைய கடை ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு

    • டீக்கடை முன்பாக அமா்ந்திருந்த பெண் மீது தண்ணீா் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
    • பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றியது மட்டுமில்லாமல், அப்பெண்ணை அவமரியாதையாகவும் கடை ஊழியர்கள் பேசி உள்ளனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜா் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஏராளமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள டீக்கடை முன்பாக அமா்ந்திருந்த பெண் மீது தண்ணீா் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    ஏற்கனவே கடைக்கு வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில், கடையின் வழித்தடத்தில் அமா்ந்திருந்ததாக குற்றம்சாட்டி அந்த பெண்ணின் மீது தண்ணீா் ஊற்றியது மட்டுமில்லாமல், அப்பெண்ணை அவமரியாதையாகவும் கடை ஊழியர்கள் பேசி உள்ளனா்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடா்ந்து, மாநகராட்சி உதவி ஆணையா் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கடையின் முன் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடைக்கு 'சீல்' வைத்தனா்.

    மேலும் திருப்பூர் தெற்கு போலீசார் கடையின் டீ மாஸ்டர் அனில்குமார், ஊழியர் வெங்கடேஷ் ஆகிய 2பேர் மீது, பொது இடத்தில் பெண்களை அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×