என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
- பெரியபாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணி மேற் கொண்டனர்.
- கடை உரிமையாளரான அஞ்சாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது27) என்பவரை கைது செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணி மேற் கொண்டனர். ராள்ளபாடி கிராமம், அஞ்சாத அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்வதை அறிந்தனர். அந்த கடையில் சோதனை செய்தபோது சுமார் 8 கிலோ பான்மசாலா-குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடை உரிமையாளரான அஞ்சாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது27) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.
Next Story






