என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழவந்தாங்கலில் மின்சார ரெயில் சென்றபோது தண்டவாள கல் தாக்கியதில் நடந்து சென்ற வாலிபர் படுகாயம்
    X

    பழவந்தாங்கலில் மின்சார ரெயில் சென்றபோது தண்டவாள கல் தாக்கியதில் நடந்து சென்ற வாலிபர் படுகாயம்

    • வேகத்தில் தண்டவாளத்தில் இருந்த கல் ஒன்று பறந்து வந்து சிவசங்கரின் தலையில் தாக்கியது.
    • ரெயில்வே தண்டவாளத்தை பயணிகள் அல்லது விலங்குள் கடக்கும் போது கால் பட்டு கற்கள் மேலே வருவதுண்டு.

    ஆலந்தூர்:

    ஆத்தூர், பாப்பிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர்(34). இவர் பழவந்தாங்கல் ரெயில் நிலையத்திற்கு வர அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து நடந்து வந்தார். அப்போது மின்சார ரெயில் சென்றது. அதன் வேகத்தில் தண்டவாளத்தில் இருந்த கல் ஒன்று பறந்து வந்து சிவசங்கரின் தலையில் தாக்கியது. இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரை பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறும்போது, இது போன்ற சம்பவம் எப்போதாவது நடைபெறும். ரெயில்வே தண்டவாளத்தை பயணிகள் அல்லது விலங்குள் கடக்கும் போது கால் பட்டு கற்கள் மேலே வருவதுண்டு. அப்போது ரெயில்களின் வேகத்தில் கல் பறந்து விழும். இது அரிதாகத்தான் நடக்கும் என்றார்.

    Next Story
    ×