என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படப்பை அருகே மகள் வீட்டில் தம்பதி தற்கொலை
    X

    படப்பை அருகே மகள் வீட்டில் தம்பதி தற்கொலை

    • படப்பை அருகே மகள் வீட்டில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புராம் (வயது 87). இவருடைய மனைவி காமாட்சி (84). இவர்களுக்கு பாரதி (50) என்ற மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் பாரதியின் வீட்டில் சுப்புராம், காமாட்சி இருவரும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரதி தனது குடும்பத்தினருடன் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டில் இருந்த தனது தாய், தந்தை இருவரும் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி தூக்கில் பிணமாக தொங்கிய சுப்புராம், காமாட்சி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த வயதான தம்பதி தூக்குப்போட்டு எப்படி இறந்தார்கள் காரணம் என்ன? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் நோய்வாய் பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.

    Next Story
    ×