என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாம்பாறு அணை அருகே விபத்து- சரக்கு வாகனம் மீது பிக்கப் வாகனம் மோதி தொழிலாளி பலி
- விபத்து குறித்து அப்பகுதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பிக்கப் வேன் அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டது என தெரிவித்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
திருவண்ணாமலையில் இருந்து பூக்கள் லோடு ஏற்றி பிக்கப் வாகனம் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே இன்று காலை வந்து கொண்டிருந்தது.
அப்போது கர்நாடக மாநிலம், மாண்டியாவிலிருந்து திருக்கோவிலூர் அய்யனார் கோவிலுக்கு 14 பேர் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் மீது பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த மண்டியா மாவட்டம், தமிழ் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேருக்கு பலத்த காயமும், மற்றவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பிக்கப் வேன் அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டது என தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு பிக்கப் வேன் டிரைவர், உடன் வந்தவர் என 2 பேர் தப்பியோடி விட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






