என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் மூழ்கி முதியவர் பலி
- சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் குமாரசாமி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் முருகன்.
- இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மதுராந்தகம்:
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் குமாரசாமி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் முருகன் (வயது 50). இவர் நேற்று மேல்மருவத்தூர் அடுத்த ஒரத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்தார். அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது, நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story






