என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுரவாயல் அருகே மூதாட்டிக்கு தைலம் தேய்ப்பதாக நூதன முறையில் நகை கொள்ளை
  X

  மதுரவாயல் அருகே மூதாட்டிக்கு 'தைலம்' தேய்ப்பதாக நூதன முறையில் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூதாட்டியிடம் நூதன முறையில் கைவரிசை காட்டி நகையுடன் இளம்பெண் தப்பி சென்றார்.
  • கொள்ளை சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  போரூர்:

  மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பொத்தியம்மா (வயது 90) வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

  இவரது வீட்டிற்கு நேற்று இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டி பெத்தியம்மாளிடம் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவந்துள்ளதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார்.

  பின்னர் உடல் வலிக்கு தைலம் தேய்த்து விடுவதாக கூறி அந்த பெண் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் நகையை கழற்றிவிட்டு தேய்த்தார். பின்னர் தான் கொண்டு வந்த கவரிங் நகையை மூதாட்டியின் கழுத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து நகையுடன் இளம்பெண் தப்பி ஓடிவிட்டார்.

  இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் கைவரிசை காட்டி நகையுடன் தப்பிய பெண்ணை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×