என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சியில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு கால்கோள் விழா
  X

  திருச்சியில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு கால்கோள் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரமாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்காக இன்று அதிகாலை பூஜையுடன் கால் கோள் எனப்படும் பந்தகால் நடும் விழா நடைபெற்றது.
  • வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் வந்து மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.

  திருச்சி:

  திருச்சியில் வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது.

  இதற்காக பிரமாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்காக இன்று அதிகாலை பூஜையுடன் கால் கோள் எனப்படும் பந்தகால் நடும் விழா நடைபெற்றது.

  இதில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், அமைப்புச் செயலாளரும், திருச்சி மாநகர், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  பின்னர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வின் உண்மை தொண்டர்கள் வந்து மாநாட்டை சிறப்பிக்க வேண்டும். திருச்சி என்றாலே திருப்புமுனை தான். எனவே எங்களுடைய அரசியலையும் இந்த திருப்புமுனை தரும் திருச்சியில் இருந்து ஆரம்பிக்கிறோம்.

  இனி எங்களுக்கு எல்லாம் வெற்றியாகவே அமையும். இந்த மாநாட்டிற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்குவதற்கு முன்பு இன்று காலை கால்கோள் என்னும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது என்று கூறினார்.

  Next Story
  ×