என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் சூறாவளி காற்று- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
- நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் கடலில் சூறாவளி போன்று பலத்த காற்று வீசியது.
- பலத்த காற்று அதிகாலை வரை நீடித்து, மழையும் பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்திற்கு "மஞ்சள் அலெர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரம் கடலில் சூறாவளி போன்று பலத்த காற்று வீசியது. அது அதிகாலை வரை நீடித்து, மழையும் பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்களது மீன்பிடி வலைகள், மரைன் மிஷின் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வீடுகள் அருகே கொண்டு வந்து வைத்தனர். படகுகளையும் கடலோரப் பகுதியின் உயரமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Next Story






