என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற விவசாயி
    X

    நெல்லை அருகே மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற விவசாயி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேச்சியம்மாள் தனது மகள் இசக்கியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
    • முருகன் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள அத்திமேடு முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 58). விவசாயி.

    இவருக்கு பேச்சியம்மாள்(52) என்ற மனைவியும், இசக்கியம்மாள் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இசக்கியம்மாளுக்கு அதே ஊரில் நடுத்தெருவில் வசித்து வரும் காளிதாஸ் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது.

    முருகனின் மகன் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.சமீபத்தில் முருகனுக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிந்து சென்ற பேச்சியம்மாள் தனது மகள் இசக்கியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை அங்கு வந்த முருகன் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், பேச்சியம்மாளை வீட்டில் இருந்த கத்தியால் முருகன் குத்தினார். இதில் அவருக்கு வயிறு, முகம், கை உள்ளிட்ட இடங்களில் குத்து விழுந்தது.

    இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார், பேச்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வந்தனர். இன்று காலை சுத்தமல்லியில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×